பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு Wi-Fi பயன்படுத்தும் போது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாகவும், இதுகுறித்து தங்களுக்கு ஏராளமான முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த குறிப்பிட்டார்.
அதனால், பொது இடங்களில் இலவச Wi-Fi மூலம் இணைய பணிகளில் ஈடுபடும்போது அதிகமான பாதுகாப்பு கவனக்கூரல் தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.