கைக்குண்டுகள் மற்றும் ஆயுத பாகங்கள் மீட்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வம்மியடி ஆற்று பகுதியில்இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகபொலிசார் தெரிவித்துள்ளனர்.

அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம்பொலிசாருடன் இணைந்து அரச புலனாய்வு பிரிவினர் சோதனை நடவடிக்கைஒன்றை மேற்கொண்டனர்.

இதன் போது வம்மியடி ஆற்றுப் பகுதியில் இருக்கும் மரம் ஒன்றின்அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 கைக்குண்டுகள்மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் சிலவற்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் திருக்கோவில் பொலிசார்மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த பிரதேசதம் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின்கட்டுப்பாட்டில் இருந்ததுடன் அங்கு அவர்களின் முகாம் இருந்துள்ளமைகுறிப்பிடதக்கது.

Share this Article