யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொதுபயன்பாட்டிற்கு கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இணக்கம்தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜனவரி31) இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்கீரிமலை ஜனாதிபதி மாளிகை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதே அவ்வாறுதெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகை அப்பகுதியில் உள்ள தனியார் காணிகளையும்கையகப்படுத்திய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்த காணிகளின்உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை, அல்லது காணிக்கான பெறுமதியைவழங்க முடியும்.
தொடர்ந்து சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, யாழ்ப்பாணபல்கலைக்கழகத்திற்கோ, சுற்றுலாத்துறைக்கோ ஜனாதிபதி மாளிகையைகையளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.