உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ்தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான்என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் அவர் தொடர்பில் 40 பேரிடம் மேற்கொள்ளப்பட்டவிசாரணைகளின் படி குற்றபுலனாய்வு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளைமுன்னெடுத்து கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில், பிள்ளையானுடன் தொடர்புடைய மற்றும் நாட்டில் இடம்பெற்றபல குற்றச்சாட்டுக்களுடன் சம்பந்தப்பட்ட பலர், வரும் வாரங்களில் கைதுசெய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறே, பிள்ளையானுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்த மற்றும்பிள்ளையானின் சகாக்கள் என்று கூறப்பட்டு விசாரணை வளையத்திற்குள்இன்னும் உள்வாங்கப்படாத சில முக்கிய நபர்கள் மட்டக்களப்பில் இருப்பதாகதெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள், மிகச் சாதராணமாக வெளியிடங்களில் உலவி திரிவதாகவம் விரைவில்குறித்த நபர்கள் கைது செய்யப்படலாம் எனவும் புலனாய்வுத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
எனவே, மட்டக்களப்பில் அல்லது கிழக்கில் பிள்ளையானின் சகாக்களாகஇருந்தவர்கள் மீது சிஐடி கவனம் செலுத்தியுள்ளதாகவும் விரைவில் அவர்கள்கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது