முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வடமாகாண ஆளுநர் வேதநாயகம்இன்றைய தினம் (நவம்பர் 08) முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன் அவரை வரவேற்றதோடுஇருவருக்கும் இடையில் மாவட்டத்தின் அபிவிருத்தி நிலைமைகள் மற்றும்எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் பின்னர் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரைமுல்லைத்தீவு மாவட்டத்தில் தீர்க்கப்படாது இருக்கும் காணிப் பிரச்சினைகள்மற்றும் காணிப் பிணக்குகள் தொடர்பில் மாவட்ட மக்களுடனும் உரியதரப்பினருடனும் விரிவாக கலந்துரையாடி சில பிரச்சினைகளுக்கு இறுதித்தீர்வைப் பெற்றுக்கொடுத்ததுடன் முடிவுகள் எட்டப்படாதகாணிப்பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் விரைவாக தீர்வைப்பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.
இதன்போது வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், மேலதிக மாவட்டஅரசாங்க அதிபர் குணபாலம், வட மாகாண காணி ஆணையாளர் சோதிநாதன், பிரதேச செயலாளர்கள், காணிக்கிளையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும்கலந்துகொண்டனர்.