கரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராகப் பதவியேற்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரிஆனந்தசங்கரி நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின்செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கரி ஆனந்தசங்கரிஆவார்.

இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13 ஆவது வயதில்புலம்பெயர்ந்து அவர் கனடா சென்றார். கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில்ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள்சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

கனடாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்களிடம் காணப்படும் முரண்பாடுகளைதீர்ப்பதற்காக முன்னின்று செயற்படுபவராக கரி ஆனந்தசங்கரி அந்தகாலங்களில் திகழ்ந்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் அத்தோடு, கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும்அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, அத்துடன், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்றுசெயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article