By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கனடா கொலையாளி – வௌியான புதிய தகவல்
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > கனடா கொலையாளி – வௌியான புதிய தகவல்
உலகச் செய்தி

கனடா கொலையாளி – வௌியான புதிய தகவல்

Last updated: 2024/03/11 at 5:59 AM
Published March 11, 2024 266 Views
Share
2 Min Read
SHARE

கனடா, ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் குடும்பம் சில தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான பிராங்க் டி சொய்சாவின் 19ஆவது பிறந்தநாள் எவ்வாறு அங்கு கொண்டாடப்பட்டது என்பதை அந்த காட்சிகள் காட்டுகின்றன.

கொலை நடந்த அதே வீட்டில் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அவருக்கு சீஸ் கேக் சாப்பிட ஆசை இருந்ததாகவும், அதன்படி தனுஷ்க மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு சீஸ் கேக்கை வழங்கியதாகவும் தனுஷ்கவின் குடும்ப நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள் அடுத்த சில நாட்களில் கனடாவுக்கு வந்ததன் பின்னர் இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை (09 மார்ச்) பர்ஹாவன் பிரதேசவாசிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான Barrhaven என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பத்தின் நினைவேந்தல் நிகழ்வு தனுஷ்கவின் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

இதில் உள்ளூர்வாசிகள், மகா சங்கரத்ன, இரு நாட்டு அரசு அதிகாரிகள் உட்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், விக்ரமசிங்கவின் குடும்பத்தின் நண்பர்கள் கொலைச் சம்பவம் தொடர்பாக அனுதாபத்தை வெளிப்படுத்தியதுடன் பல கனேடியர்களும் இது குறித்து கவலை வௌியிட்டுள்ளனர்.

தாக்குதலில் உயிர் பிழைத்து பலத்த காயங்களுக்கு உள்ளான தனுஷ்க விக்ரமசிங்க தற்போது இரண்டு சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று முடித்த பின்னர் அவரை கவனித்துக் கொள்வதாகவும் ஒட்டாவிலுள்ள ஹில்டா ஜயவர்த்தனாராம விகாரை அறிவித்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய தனுஷ்கவின் சகோதரர் மற்றும் உறவினர்களை ஒட்டாவாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை- மீண்டும் வெளியாகிய கரும்புகை !

SUB EDITOR March 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பல்கலைக்கழக மாணவருக்கு நேர்ந்த விபரீதம்
Next Article கிளிநொச்சியில் 40.9 ஏக்கர் காணி விடுவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

உலகச் செய்தி

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

June 9, 2025
உலகச் செய்தி

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

May 20, 2025
உலகச் செய்தி

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

May 16, 2025
உலகச் செய்தி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

May 12, 2025
உலகச் செய்தி

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

May 11, 2025
உலகச் செய்தி

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

May 11, 2025
உலகச் செய்தி

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

May 10, 2025
உலகச் செய்தி

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை- மீண்டும் வெளியாகிய கரும்புகை !

May 8, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?