கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் , ஆத்மசாந்திப் பிராரத்தனை நிகழ்வும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம்கனடாஅமைப்பினரின் ஏற்பாட்டில் கனடா ரொரண்டோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை (மே 15) அன்று மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

இதேவேளை குமுதினிப் படுகொலையின் 40 ஆவது  நினைவாகவும்  , முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16ஆம் ஆண்டு (மே18) நினைவாகவும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு மே 17 அன்றநெடுந்தீவு மக்கள் ஒன்றியம்கனடா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு மக்கள் பங்களிப்புடன் உணர்வுடன் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இளையோர் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வலிசுமந்த மே மாதத்தில் எம் உறவுகள் இழந்த நினைவாக நாம் ஒவ்வொருவரும்அந்த நினைவுகளைச் சுமந்து வாழவேண்டும். அடுத்த எம் தலைமுறைக்கும் அந்தவலிகளை நாம் தெரியப்படுத்தவேண்டும் உலக நாடுகள் தோறும் பரந்து வாழும்எம் மக்களின் குரல் எமது மக்களின் விடுதலைக்காக தொடர்ந்துஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் எம் இனத்தின்விடுதலைக்கான  தேவை உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படும். அதற்கான முழுநடவடிக்கைகளையும் ஒவ்வொரு தமிழ் அமைப்புகளும் தொடர்ந்துஈடுபடவேண்டும் என நெடுந்தீவு மக்கள் ஒன்றியம்கனடா அமைப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article