கணவனை அடித்துகொன்ற மனைவி – மாஞ்சோலையில் சம்பவம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாஞ்சோலைபகுதியில் கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்த73 வயதுடைய கணவன் அடி காயங்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூன்29) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குமாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை04) உயிரிழந்துள்ளார்.

மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி தனது ஊன்றுகோலால் தாக்கியதில் கணவன்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்தாக பொலிஸாரின்விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மனைவி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article