கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டலின் காரணமாக இந்திய விமானம் ஒன்றில் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் அறிவித்துள்ளார்.
மும்பையிலிருந்து இன்று (ஒக். 19)பிற்பகல் 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இந்தியாவின் விஸ்தாரா விமானச் சேவையைச் சேர்ந்த ஒரு விமானம் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும், விமான பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, விமானத்தின் உள்ளே சோதனை நடைபெற்றதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறினார்.