கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பானமுன்னாயத்த வேலைகளுக்காக இன்று (மார்ச்12) நெடுந்தீவில் இருந்து நெடுந்தீவு பிரதேச செயலர் தலமையிலான குழுவினர் கச்சதீவை சென்றடைந்துள்ளனர்.
கச்சதீவை நாடி வருகின்ற பக்தர்களது நலன்சார்ந்த , நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் குழுவினர் அங்கு சென்றுள்ளதுடன், தங்கள் பணிகளையும் ஆரம்பித்துள்ளனர்.
இம் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனிதஅந்தோனியார் திருவிழாவுக்கு இலங்கை கடற்படையினர் அத்தியாவசிய தேவைகள் அனைத்தினையும் மேற்கொண்டு முடிவடையும் நிலையினை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.