கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 14,15 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச்சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1300.00 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவதுஎனவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு படகு சேவையில் ஈடுபடுகின்ற படகின் உரிமையாளர்கள்பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் அதற்குரிய சான்றிதழ்களைகடற்படையினரிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார்போக்குவரத்து துறையினரின் பேரூந்துக்களும் பயன்படுத்தப்படவுள்ளதுடன் மார்ச் 14 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் பகல் 11.30 வரையாழ்ப்பாணத்தில் இருந்து பேரூந்துக்கள் புறப்படவுள்ளதுடன் அதிகாலை 5.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை குறிகாட்டுவானில் இருந்து படகு சேவை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை யாத்திரிகர்களுக்கு மார்ச் 14 ஆம் திகதி இரவு உணவும் மார்ச் 15 ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.