கச்சதீவு திருவிழா சிறப்புற நடக்க ஒத்துழைத்தவர்க்கு கௌரவிப்பு- இந்திய பக்தர்கள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருநாள் திருப்பலி இன்று (மார்ச்15) சிறப்பாக இடம்பெற்றது.

திருநாள் திருப்பலியின் இறுதியில், இந்திய மக்கள் சார்பாக இராமேஸ்வரம் பங்குத் தந்தை அடிகளார் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம் அடிகளார், நெடுந்தீவு பங்குத் தந்தை ப. பத்திநாதன் அடிகள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன், நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன், யாழ்-இந்தியா துணைத்தூதர் சாய்முரளி மற்றும் கடற்படை அதிகாரிகள் ஆகியோருக்கு, இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லூர்து ஆனந்தம் ஆண்டகையினால் பொன்னாடை அணிவிக்கப் பட்டு கௌரவிக்கப்பட்டது.

தங்களை சிறப்பாக வழிநடத்தி திருப்பலியை நடாத்திய இந்தியாவின்சிவகங்கை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லூர்து ஆனந்தம் ஆண்டகைக்கு இந்திய பக்தர்கள் சார்பிலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

Share this Article