கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளையதினம் (மார்ச்14 ) வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (மார்ச் 13) கச்சதீவு பகுதியில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பெருமளவு வியாபாரிகள் படையெடுத்துள்ளனர்.
நெடுந்தீவு மற்றும் ஏனைய தீவுகள், யாழ் பிரதேசத்தில் இருந்தும் வாடகைக்கு அமர்த்திய படகுகள் மூலம் பொருட்களை கொண்டுவந்துள்ளதுடன் அவற்றினை கச்சதீவினுள் உரிய இடங்களுக்கு மாற்றுவதற்கான வாகன வசதியினை கடற்படையினர் வழங்கிவருவதை காணக்கூடியதாகவுள்ளது.
இதேவேளை கடற்படையினரும் இங்கு சிற்றுண்டி மற்றும் வியாபார நிலையத்தினை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
இன்றையதினம் காலையே குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து பொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் தற்போது வரை அவை கச்சதீவில் இறக்கப்படுகின்றது.
கடைகள் அமைப்பதற்கான இட ஒதுக்கீடுகளை நெடுந்தீவு பிரதேச சபையினர் மேற்கொண்டதுடன் கச்சதீவிலும் தங்கள் பணியினை மேற்கொண்டுவருகின்றனர்.