அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்,வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் வரும்ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார். இதற்கானஅனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடும் குளிர்காரணமாக, பதவியேற்பு விழா, வரும் ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க நேரப்படி3 மணிக்கு உள் அரங்கத்தில் நடக்கும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பதவியேற்பு விழா குறித்து டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளஅறிக்கையில் :
“ஆரம்பத்தில் என்னையும், எனது நிர்வாகத்தையும் எதிர்த்தவர்கள் கூட, தற்போதுபதவியேற்பு விழா எப்போது நடக்கும் என்று விரும்புகிறார்கள். நம் நாட்டுமக்களைப் பாதுகாப்பது எனது கடமையாகும்.
வானிலை நிலைமையைக் கருத்திற்க்கொண்டு பதவியேற்பு விழா வரும் ஜனவரி20ஆம் திகதி மதியம் 3 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) உள் அரங்கத்தில்நடக்கிறது. எந்த வகையிலும் மக்கள் காயப்படுவதை நான் பார்க்கவிரும்பவில்லை. பல்லாயிரக்கணக்கான சட்ட அமுலாக்கப் பிரிவினர், பொலிஸார் மற்றும் குதிரைகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள்ஜனவரி 20ஆம் திகதி பல மணி நேரம் வெளியில் இருப்பது ஆபத்தானநிலைமையாகும்.
எந்தவொரு நிகழ்விற்கும் நீங்கள் வர முடிவு செய்தால், பாதுகாப்பு ஆடைகளைஅணியுங்கள்.மிகவும் குளிரான காலநிலை காரணமாகப் பதவியேற்பு உரையைஉள் அரங்கத்தில் நடத்த உத்தரவிட்டுள்ளேன். பல்வேறு உயரதிகாரிகள் மற்றும்விருந்தினர்கள் அரங்கத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். இது அனைவருக்கும்மிகவும் அழகான அனுபவமாக இருக்கும்.
இந்த வரலாற்று நிகழ்வைத் தொலைக்காட்சியில் நேரலையாகக் காணஅனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் ஒன்றாக சேர்ந்து, மீண்டும்அமெரிக்காவை சிறந்ததாக மாற்றுவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.