மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின்படி, 2024 டிசம்பர் மாதத்துக்கான லிட்ரோஎரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என லிட்ரோஎரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 3,690 ரூபாவாகவும் 05 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 1,482 ரூபாவாகவும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 694 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும்.
கடந்த நவம்பர் மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும்மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.