இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை நள்ளிரவு முதல் திருத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, சிலோன் சுப்பர் டீசலின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கதீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 331.00 ரூபாவாகும்.
இதேவேளை ஏனைய விலைகளில் மாற்றமில்லை என பெற்றோலியகூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த மாதம் மண்ணெண்ணெயின் விலையில் மாத்திரம் மாற்றம்ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம்மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை கனியவள கூட்டுத்தாபனம்தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.