எம் குலத்து மண் கவிதை…..

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எம் குலத்து மண்ணுக்கு
என்று ஓர் வாசமுண்டு
பிறப்போடு ஒட்டி உணர்வுகளை தூண்டி நிற்கும் ,
நிதம் துளிர்விட்டே  தூது விடும்,
நெடுந்தீவு   எ னு ம்   தீவு

நேற்று அது  என்  தீவு
இன்று எனக்கு எட்டாத்திவு  ஆகிடுமோ,

தொன்மையான எம்தீவு  தொலைந்திடுமோ இம்மையிலே, பசி தெரியாபசுந் தீவு,
கற்பகத்தரு  நிறைந்த கற்பகத்தீ வதுவே,
பாலுணவு நிறைந்ததுவும்
பனம் பண்டம்  நிறைந்ததுவும்,

நுங்கு பூரான்நுகரனல்ல  பனாட்டும் புளுக்கொடியல் ஓடியல் கூழுடனே  கூடியபல கடலூணவாம், மூலிகை

பற் பலவும்  அங்கு மூப்படையா முதியோரும்,  மாடு கன்று கால்நடைகள் மா  வினமும் கூடடையும்  புறா புள் இனமும், புளுதி படிந்த கல்வேலி பார்ப்போரை வியப்புறுத்தும் பெருக்குடன் பற்பல புதினங்களும்   கோட்டையுடன்கொத்தளமும்  கோ  மாரின்

ஊடறுப்பு  வளித்தடமும், நிலபுலத்தின் பெயர்களுமோ  நீண்ட நல்ல பட்டியலாம்,

தொன்மையை விளக்கவல்ல  தொடர்தீவு  கூட்டங்களும்  பல்நாட்டுப்  பாரம்பலுக்கு

பலத்த தொரு வேராச்சு,
நீண்ட நிலையான அபிவிருத்தியுடன்
கூடிக்குலாவுதற்கு  கூடுங்கள் நம் ஊரில்,
குலத்தை விருத்திசெய்து குலமண்ணை

காத்துவைக்க  ஆண்டுக்கொருதரமேனும் உறவுக்காய் ஊர் போவோம், நிலையான அபிவிருத்தி நீண்டநாள் கனவாகும், வழமானநாடக்கி  வாழ்வதுக்குவளி அமைத்து,

பல்தொழில் வளர்ச்சியுற்று வாழ்வதற்கு வளிசமைப்போம்
வாரீர் வாரீர் ஒன்றாய் வாரீர்!!!

ஆக்கம்
விர்சாலி  இளங்கோ,
தம்பனை

Share this Article