உப்புவெளியில் பொலிஸார் , இளைஞர்களிடையே மோதல் – கைது தொடர்கிறது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

திருகோணமலை நிலாவெளி உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்டஅடம்போடை பகுதியில் அதிக சத்தத்தை எழுப்பிய குற்றச்சாட்டின் பேரில்மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்று கைது செய்ய முற்பட்டபோக்குவரத்து பொலிஸாரது கடமையை செய்ய விடாது தடுத்துள்ள சம்பவம், திங்கட்கிழமை (மார்ச்31) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நிலாவெளி அடம்போடை பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் பொலிஸாரதங்கள் கடமையை செய்ய விடாது வீட்டுக்குள்இழுத்து சென்ற குற்றச் சாட்டில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

 போக்குவரத்து பொலிஸார் இருவரும் கடமையில் இருந்து தங்கள் கடமையைசெய்ய முற்பட்ட போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்தசம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 4 நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும்பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார்முன்னெடுத்துள்ளனர்

Share this Article