உக்ரைன் மீது நேற்று பயங்கர தாக்குதல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய ஏவுகணையை கொண்டுஉக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய ஜனதிபதி விளாடிமிர்புடின் தெரிவித்துள்ளார்.

புடின் வெகுநாட்களாக பொதுவெளிகளில் தென்படவில்லை என்ற கருத்து பரவிவந்த நிலையில், நேற்றையதினம் (நவம்பர் 21) உக்ரைன் மீது ஏவுகணைதாக்குதலை நடத்தியதாக அவரே கூறியுள்ளார்.

மேற்கத்தைய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா மீதுஉக்ரைன் பயன்படுத்தியதையடுத்தே, இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் மேற்கத்தைய நாடுகளையும் புடின்எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த தாக்குதல் உக்ரைனின் டினிப்ரோ நகர் மீதுமேற்கொள்ளப்பட்டுள்ளதோடு ‘ICBM’ எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை இதற்கு பயன்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக உக்ரைனியஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதன்போது, குறைந்தது 26 பேர் வரை காயமடைந்திருக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this Article