நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்குஅருகில் இலஞ்சம் வாங்க முயன்ற தரகர் ஒருவரை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுகைது செய்துள்ளது.
ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 10,000 ரூபாய்இலஞ்சம் வாங்கியதாக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளால் மோட்டார் சைக்கிளின்இரண்டாம் நிலை பதிவுச் சான்றிதழை அசல் பதிவுச் சான்றிதழாக மாற்றுவதற்குசந்தேக நபர் 30,000 ரூபாய் இலஞ்சம் கோரியிருந்தார்.
இது தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்ட போது குறித்த நபர்கோரியிருந்த பணத்தில் 10 ஆயிரம் ரூபாவை பெற்ற போது இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட உள்ளார்.