இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகஏற்பாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (பெப். 28) அன்று நெடுந்தீவு பிரதேசமக்களுடனான சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தலைமையின் கீழ் நெடுந்தீவுக்கான கள விஜயத்தினை மேற்கொள்ளும் நிலையில் குறித்த தினத்தில் (பெப். 28) நெடுந்தீவு மத்தியிலுள்ள தேவா கலாச்சார மண்டபத்தில் மு. ப. 11.00 மணிமுதல் பகல் 1.30 மணிவரை பொதுமக்கள் சந்திப்பினையும் நடாத்தவுள்ளது.
எனவே நெடுந்தீவில் உள்ள பொது மக்கள் , சமூக மற்றும் அரச சார்பற்றநிறுவனங்கள் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.