யாழ்– கோப்பாயில் இறுதிப் பயணத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம்மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் மத்தியை சேர்ந்த சோதிலிங்கம் கஜேந்திரன் (வயது30) என்பவரேவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள்நேற்றைய தினம் (பெப். 21) வெள்ளிக்கிழமை நடைபெற்று தகன கிரியைக்காகபூதவுடலை கோப்பாய் – கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு எடுத்துசென்றவர்கள் மீது வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஏனைய ஐவரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளைமுன்னெடுத்துள்ளதுடன் , தப்பி சென்ற வாகனத்தினை கண்காணிப்புகமராக்களின் காணொளிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்