இந்திய-இலங்கை மீன்பிடி பிரச்சனை தொடர்பில் இந்திய மீன்வளத்துறைதலைமை அலுவலகத்தில் சந்திப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

     தமிழ்நாடு மற்றும் காரைக்கால்  மீனவ பிரதிநிதிகளுடன் மத்திய  மீன்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன்  சிங் , இனை அமைச்சர்கள் , மத்தியமீன்வளத்துறை  செயலாளர்கள் மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகளின்கலந்துரையாடல், புது டெல்லியில் உள்ள மீன்வளத்துறை தலைமைஅலுவலகத்தில்  நேற்றையதினம் (மார்ச்28) நடைபெற்றது.

    வெளியுறவுதுறை அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை  தலைமையிலான குழுவினர் மத்திய அமைச்சர்களோடுகலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில்  கச்சத்தீவு மீன்பிடி பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்  குறித்துவிவாதிக்கப்பட்டது. மேலும் மீன்பிடி பிரச்சனைகள் பாதிக்கப்பட்டமீனவர்களுக்கு புனர்வாழ்வு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    குறிப்பாக பாரத பிரதமர் வரும் ஏப்ரல் 5ம் தேதி இலங்கை செல்ல உள்ளசூழ்நிலையில் இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களையும், படகுகளையும் மீட்க ராஜாங்கரீதியாகவும் இருநாட்டு மீனவர்கள் நட்புறவுமேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைமுன்வைக்கப்பட்டது.

      

Share this Article