ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோர் பலி:

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான ஆங்கில கால்வாயைக் கடக்கமுயன்ற எட்டு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதுடன் 10 மாத குழந்தை ஒன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திவெளியாகியுள்ளது.

குறித்த சம்பவமானது, வடக்கு பிரான்சில் உள்ள கடற்கரை பகுதியில்இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் போது புலம்பெயர்ந்தோர் பயணித்த படகானது, பாறைகளில் மோதிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, விபத்தில் சிக்கியவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர்வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 10 மாத குழந்தைஒன்று தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, நேற்றிலிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் சுமார் 200 புலம்பெயர்ந்தோர் இவ்வாறான ஆபத்தான பயணங்களில் இருந்துமீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Share this Article