அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இலங்கையர்கள் பலருக்கு குடியுரிமை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தபலருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அவர்களின் குடியுரிமையை அந்த நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ்அங்கிகரித்து வழங்கி வைத்துள்ளார்.

அவுஸ்திரேலியா முழுவதும் அவுஸ்திரேலிய தினத்தைக் கொண்டாடவும் பலருக்குஅவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கவும் 280க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ஜேர்மனி, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தென்னாபிரிக்கா, அமெரிக்கா, மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச்சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கன்பராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துவெளியிட்ட அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ், அவுஸ்திரேலியகுடியுரிமையைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு அவுஸ்திரேலிய தினம் முக்கியநாளாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article