யாழ்- செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியைஅகழ்வதற்கான நிதி மதிப்பீட்டு அறிக்கை யாழ்ப்பாண நீதிமன்றத்திற்குசமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட செம்மணி சிந்துபாத்திமயானத்தில் எரி மேடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் மனிதஎச்சங்கள் காணப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய யாழ்போதன வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன்நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகள் மனித எச்சங்கள் என சட்ட வைத்தியஅதிகாரியினால் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்உறுதிப்படுத்தப்பட்டது.
இதேவேளை அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதிதொடர்பான அறிக்கையை காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் மற்றும் சட்டவைத்திய அதிகாரி பிரணவன் இணைந்து நிதி அறிக்கை சமர்ப்பிக்குமாறும்அதனை மேல் நீதிமன்றம் ஊடாக நீதி அமைச்சுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைஎடுக்குமாறு உத்தர விடப்பட்டது. இந்நிலையில் குறித்த அகழ்வுக்கான நிதிமதிப்பிட்ட அறிக்கை நீதிமன்றத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமைசமர்ப்பிக்கப்பட்டுள்ளது