அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஈரானின் அறிவிப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் விடுத்துள்ள அறிவிப்பானது, மத்திய கிழக்கைஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இதற்கமைய, இஸ்ரேலுக்கு பதிலடி வழங்க தங்களிடம் உள்ள அனைத்துகருவிகளையும் பயன்படுத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக ஈரான்அறிவித்துள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்டதை பழிவாங்கும் விதமாக கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி இஸ்ரேலை குறிவைத்து ஈரான்200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

குறித்த தாக்குதல்களில் அதிகப்படியான ஏவுகணைகளை இஸ்ரேலின் வான்தடுப்பு அம்சங்கள் தடுத்து நிறுத்தியதாகவும் ஈரானின் தாக்குதல்களுக்குஇஸ்ரேல் தக்க பதிலடி கொடுக்கும் எனவும் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள்பகிரங்கமாக சூளுரைத்திருந்தன

இதன்படி, கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி தெஹ்ரான் மற்றும் மேற்கு ஈரானுக்குஅருகிலுள்ள ஏவுகணை தொழிற்சாலையை குறிவைத்து இஸ்ரேல் 3 அலைகளாகஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்நிலையிலேயே, ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு எதிராக பதில்தாக்குதல் நடத்த தங்களிடம் உள்ள அனைத்து கருவிகளையும்பயன்படுத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.  

அத்துடன், இஸ்ரேலின் தாக்குதல் மட்டுப்படுத்தப்பட்ட சேதத்தையே ஏற்படுத்திஇருப்பதாக ஈரான் தெரிவித்துள்ள அதேவேளை, தற்போதைய நிலைமையின்தீவிரத்தை ஆராய்ந்து ஈரான் தமது பலத்தை நிலைநிறுத்துவதற்கு தேவையானநடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது

Share this Article