நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த வாரம் முதல் இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட திடீர் முடக்க நிலை காரணமாகப் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் குறைவான மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அண்மையில் கல்வியமைச்சுச் செய்திகள் தெரிவித்தன.
அதனடிப்படையில் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசார் பாடசாலை ஊழியர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கு தடுப்புர்சிகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.