தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளர் நாவலன் அவர்களின் நிதியுதவியில் குடிநீர் தாங்கி வழங்கிவைப்பு
கடந்த மாதம் புங்குடுதீவில் வீசிய கடும் காற்றின் காரணமாக புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் வாழ்கின்ற குடும்பமொன்று பலத்த இன்னல்களை எதிர்கொண்டிருந்தது . கடற்தொழிலை நம்பி வாழ்கின்ற இக்குடும்பத்தின் வீட்டில் காணப்பட்ட பல பொருட்கள் காற்றின் காரணமாக சேதமடைந்திருந்தன
.குறிப்பாக குடி தண்ணீர் தாங்கியொன்று முற்றாக சேதமடைந்திருந்தது. பலர் இங்கு வருகைதந்து பார்வையிட்டபோதும் அத்தரப்பினரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ எவ்வித உதவிகளும் இக்குடும்பத்தினருக்கு கிடைத்திருக்கவில்லை .
இந்நிலையில் 03 – 07 – 2021 அன்று வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து குடிநீர் தாங்கியொன்றினை இக்குடும்பத்தினருக்கு வழங்கிவைத்ததோடு உலருணவு பொதியொன்றினையும் வழங்கியிருந்தார் . அத்தோடு சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று குடும்பங்களுக்கும் உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன