மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புக்கள் பதிவாகி வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் தற்போது மழை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், துபாய் பொலிஸார், கனமழை பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு கவலைகள் எழும்பியுள்ளதால், அப்பகுதி மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், நகரின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நகர மக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கையில், வெள்ளிக்கிழமை நண்பகல் வரை மிகவும் கவனமாக இருக்கவும், தேவைப்படாவிட்டால் முற்றிலும் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் துபாய் பொலிஸார் வலியுறுத்தியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியில், கனமழை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருந்ததாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.