அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய மற்றும் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 19ம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரை இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே எதிர்வரும் 13ம் திகதி வரை அவர விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டது.