சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு இன்றுடன் (டிசம்பர்26) 20 வருடங்கள்பூர்த்தியாகின்ற நிலையில் நாடாளவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும்வகையில் நாளை (டிசம்பர் 26) காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும்இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 ஆம் திகதி தேசியபாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுமாத்ரா தீவுக்கு அருகில்9.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரலைகாரணமாக, இலங்கையின் 14 கடலோர மாவட்டங்கள் கடுமையாகபாதிப்பட்டதுடன் சுமார் 35,000 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.