முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளமுப்படையினரை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், முன்னாள்ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும்தீர்மானம் தொடர்பான பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிளக்கியிருந்தார்
இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள்ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின்எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின்பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம்தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்குஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.
மேலும் முப்படை வீரர்கள் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின்பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது எனபாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.