கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துதேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறுஅனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாகபொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கதெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம்6,500 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் கடமையில்ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனதுங்கதெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள 2000க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கிறிஸ்மஸ்தினத்தன்று ஆராதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்தந்த பொலிஸ் பகுதிகளில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்கள், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர், பொலிஸ் தலைமையகத்தைச்சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்தேவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள சிவில் குழுக்களுடன் ஒருங்கிணைந்துதேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்படுவார்கள்.
உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேடஅதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த பேச்சாளர், தேவைப்பட்டால் இராணுவத்தினரிடம் அல்லது ஏனைய பாதுகாப்புப்படையினரின் உதவியை பொலிஸார் நாடுவார்கள் என்றார்.
இதேவேளை, பண்டிகைக் காலங்களில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டும்சாரதிகளை பரிசோதிக்க விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில்பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான பாதுகாப்புத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சன நெரிசலான பகுதிகளில் குற்றச்செயல்களைக் கண்காணித்து அடையாளம் காண்பதற்காக 500க்கும் மேற்பட்டபொலிஸ் அதிகாரிகள் சிவில் உடை அணிந்து பணியில்ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.