முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சில்வேஸ்திரி அலன்ரின் [உதயன்] அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் நாளையதினம் (ஜூன் 30) ஞாயிற்றுக்கிழமை காலை 10 .00 மணிக்குஅன்னாரது நெடுந்தீவு இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் மத வழிபாடுகளைத் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று தொடரந்து அன்னாரின் திருவுடல் நல்லடக்கத்திற்காக நெடுந்தீவு மத்தி சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பின்ரும் கட்சியின் முன்னாள்யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாள்ரும் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பின்ருமான சில்வேஸ்திரி அலன்ரின் அவர்கள் நேற்றையதினம் நெடுந்தீவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருந்தார்.