நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபடும்வடதாரகை படகுக்கான மின் விசிறிகள் 05 அன்பளிப்பாக வழங்கப்பட்டு தற்போது பொருத்தப்பட்டுள்ளது.
நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த இராமலிங்கம் சுந்தரலிங்கம் ( லயன் சுந்தா) அவர்கள் வடதாரகை பயணிகளின் நன்மைகருதி படகில் பொருத்துவதற்காக 05 மின்விசிறிகளை கடந்த மே22 அன்று யாழ்நகரில் வைத்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரியிடம் கையளித்த நிலையில் அவை கடந்த வாரம் படகில் பொருத்தப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வடதாரகை படகுக்கானமின் விசிறிகள் நீண்ட நாட்களாக செயலிழந்து இருந்தமையால் பயணிகள்பெரும் சுவாச நெருக்கடிகளை எதிர்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும் இதேவேளை இம் மனிதாபிமான சேவையினை பலரும் பாராட்டியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.