பங்களாதேஷில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்ற ஷேக் ஹசீனா, 4 ஆவது தடவையாகவும் அந்த நாட்டின் பிரதமராகியுள்ளார்.
அவரது கட்சியான அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தாம் போட்டியிட்ட 300 தொகுதிகளில் 223 தொகுதிகளில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது.
இந்தநிலையில், பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய அவாமி லீக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.