புதிய மாற்றங்களுடன் புத்தாண்டைச் சந்திப்போம். புதிய மாற்றங்களுடன் புத்தாண்டை தீவக மக்கள் வரவேற்கத் தயாராக வேணடும்.
இன்றைய பொருளாதார நெருக்கடியில் மக்கள் படும் இன்னல்களை நாம் அறிவோம். முக்கியமாக பின்தங்கிய தீவக மக்கள் பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளமையை கண்கூடாக காண்கின்றோம்.
வாழ்வாதாரம் முதல் மீன்பிடி, விவசாயம், போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு குறைபாடுகளுடனேயே தீவகப் பிரதேசம் நீண்ட காலமாக இருக்கின்றமை வேதனைக்குரியது.
இவற்றுக்கு தீர்வு காண்பதற்கான ஆண்டாக 2023 புதிய ஆண்டு அமையவேண்டும் என்பதே எமது எண்ணம். தீவகத்தின் புத்திஜீவிகளை உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்வதன் ஊடாக தீவக மக்களின் பிரச்சிகைகளை மக்களே தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும் என்று நம்புகின்றோம்.
இதுவரைகாலமும் கட்சிசார் அரசியல் போட்டியால் கட்சி சார்ந்த பிரதிநிதிகளே வேட்பாளர்களாக தகுதி தராதரமின்றி போட்டியிட்டமையால் தீவக உள்ளுராட்சி மன்றங்களில் சிறப்பான நபர்களை தெரிவு செய்வதில் மக்கள் குழப்பமடைந்தமை உண்மையே.
ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பது தீவக அபிவிருத்தியினை முற்றாகப் பாழ்படுத்திவிடும் என்பதை நாம் அறிவோம்.
இதற்கான நல்ல தீர்வாக எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கட்சி பேதமின்றி தீவகத்தின்பால் அக்கறையுள்ள, அர்ப்பணிப்புள்ள கல்விமான்களை தேர்தலில் முன்னிறுத்துவதற்கு நாம் முன்னிற்போம்.
இதனூடாக நிச்சயம் தீவகத்தில் இதுவரை காலமும் தொடர்ந்த அபிவிருத்தி அற்ற நிலையில் மாற்றங்கள் உருவாகும். இதற்காக எம்மோடு தீவக மக்கள் பயணிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மாரிமுத்து பரமேஸ்வரன்
தீவக அமைப்பாளர்.
பொதுஜன பெரமுன கட்சி