யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சலங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.சிவபாலசுந்தான் விசேட அறிவித்தல் ஒன்றை வெளி யிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்களின் போது வேறுமாவட்டங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்பட்டு அவற்றை எந்த விதமான பாதுகாப்பு நடைமுறைகளும் இன்றி ஆலய சடங்குகளிலும் மற்றும் ஊர்வலங்களிலும் ஈடுபடுத்துகின்றனர்.
இதன்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகள் எதும் பின்பற்றப்படாமல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இவ்வாறு யானைகளை பயன்படுத்தவது சட்டவிரோதமானதும் பொதுமக்களுக்கு எதிர்பாராதவிதமான ஆபத்துக்களை விளைவிக்கக் கூடியதுமாகும் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி இவ்வாறு யானைகளைப் பயன்படுத்தவதற்கான அனுமதி வனவிலங்திணைக்களத்திடம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் பொதுமக்கள் அதிகமாகக்கூடும் இடங்களில் யானைகளை கையாள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதற்கான ஆளணி ஆகியவை பேராதனை கால்நடை வைத்திய பீடத்தில் மட்டுமே உள்ளது.
எனவே இவ்வாறு உரிய அனுமதி பெறப்படாமலும், உரியபாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது யானைகளை உற்சவங்களில் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் உற்சவங்களை நடத்துவோரை கேட்டுக்கொள்வதாக அரசாங்க அதிபர் ஆ.சிவபாலசுந்தரன் அறிவிப்பினை விடுத்துள்ளார்.