திரு.ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

திரு.ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம்
(முன்னாள் கௌரவ ஆளுநரின் உதவிச் செயலாளர், முன்னாள் பிரதித்திட்டப் பணிப்பாளர் திட்டமிடல் செயலகம் வடக்கு மாகாணம்)

நெடுந்தீவு கிழக்கு 14ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், 42,கோவில் வீதி ஒழுங்கை, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு.யோசேப்பு சேவியர் செல்வநாயகம் 02.08.2025 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார். அன்னார் காலஞ்சென்ற யோசேப்பு (நெடுந்தீவு ப.நோ.கூ சங்க களஞ்சிய முகாமையாளர்) மற்றும் மலக்கீசம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற லீனஸ்ரட்ணம் மற்றும் மேரி பியாற்றிஸ் தம்பதிகளின் மருமகனும், மிறோன் லியோனிற்றா (சமுர்த்தி முகாமையாளர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புக் கணவரும், தவநாயகம் (ஓய்வுநிலை அதிபர்), புனிதகலா (லண்டன்), புஸ்பகலா ( பிரதேச செயலகம், நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்,

அன்னாரின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 04.08.2025 திங்கட்கிழமை அன்று நெடுந்தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு செவ்வாய் 05.08.2025 மாலை 3.00 மணியளவில் நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நெடுந்தீவு கிழக்கு கட்டுராமன்சல்லி சேமக்காலையில்  நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குடும்பத்தினர்

Share this Article