சுவிற்சர்லாந்தில் “சுவிஸ் தமிழ் ஊடக மையம்” நேற்று முன்தினம் (மே26) சுவிற்சர்லாந்தின் பாசல் பிராந்தியத்துக்கு அருகாமையில் உத்தியோகபூர்வமாகஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
“சுவிஸ் ஊடக மையம்” அறிமுகத்தின்பட தலைவராக ஜெராட், உபதலைவராகஅசோக், செயலாளராக மதனராஜ், உபசெயலாளர் வின்ஸ்லோ, பொருளாளராகமயூரன் மற்றும் ஆலோசகராக ஊடகவியலாளர் கனகரவி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை “சுவிஸ் தமிழ் ஊடக மையம்” திட்டமிட்டபடி ஒவ்வொரு ஆண்டும்ஒவ்வொரு மூத்த ஊடகவியலாளரை மதிப்பளிக்கவுள்ளது
அந்த வகையில் இந்த ஆண்டு மூத்த ஊடகவியலாளர் ஞானசுந்தரம் குகநாதன் மதிப்பளிக்கப்படுவதற்காக தெரிவாகி அவரது உடல் நலக்குறைவால் அவரால்சமூகமளிக்க முடியாது போயிருந்ததையால் அவருக்கான மதிப்பளிப்பினை ஊடகவியலாளர் அமரதாஸ் வழங்கஊடகவியலாளர் அசோக் பெற்றுக்கொண்டார்.