சிறப்பாக இடம்பெற்ற “வாழ்விற்கான பேரொளி வாசிப்பு” அமர்வு – 11.

SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் “வாழ்விற்கான பேரொளி வாசிப்புஅமர்வு – 11 இன்றையதினம் (பெப். 12) காலை  நிலைய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கதை கூறல், மற்றும் மாணவர்களை நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளாக்கும் வகையில் சிறப்பு வளவாளர்களாக  யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் நெடுந்தீவுக்கான சமூக இலகுபடுத்துனர்கள் க. பிருந்தா,  எ. சாளினி ஆகியோர்  கலந்து சிறப்பித்திருந்தனர்.

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் வகையிலும் சிறுவர் உரிமைகள் தொடர்பிலும் இன்றையதினம் வளவாளர்கள் சிறப்பாக சிறார்களை வழிகாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிறுவர்களிடம் நூல்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாழ்விற்கான பேரொளி வாசிப்புஎனும்  நிகழ்விற்கான வழிகாட்டல் மற்றும் அனுசரணையினை வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டுக் குழுவினர் வழங்கியிருந்தனர்.

Share this Article
Exit mobile version