கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் 14, 15 திகதிகளில் இடம்பெற ஏற்பாடாகியுள்ள நிலையில் திருவிழாவில் 9000 பேர்கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களுக்கு என சுமார் 8000 யாத்திரிகர்கள் இதன்போது கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன் மேலதிகமாக உத்தியோகத்தர்கள் , பாதுகாப்பு தரப்பினர் என சுமார் 9000 பேர் கலந்து கொள்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பானமுன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (பெப். 07) அரசாங்க அதிபர் அலுவலகத்தில்நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.