நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை இவ்வருடத்தில் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரதமரும் கல்விஅமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் கலாசாலைகளில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களுக்கும் இந்தவருடத்துக்குள் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்உறுதி வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம் (பெப். 18) பாராளுமன்றிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“தேசியபாடசாலைகளிலிருந்து மேலதிகமாக காணப்படும் ஆசிரியர்களைமாகாண பாடசாலைகளுக்கும் மாகாண பாட சாலைகளில் மேலதிகமாககாணப்படும் ஆசிரியர்களை தேசிய பாடசாலைகளுக்கும் நியமிப்பதற்கானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
எனினும் நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டநிலையில் அது நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் கிடைத்த நீதிமன்ற தீர்ப்பைஅடுத்து மீண்டும் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் இந்த வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர்வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.