கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருநாள் திருப்பலியில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் இன்று (மார்ச்15) கலந்துகொண்டிருந்தார்.
இன்றையதினம் காலை திருவிழா திருப்பலியில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். இதேவேளை யாழ் அரச அதிபர் ம. பிரதீபன், வடமாகாண பிரதம செயலாளர் எஸ். இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக்டிறஞ்சன், யாழ் மாவட்ட சமுரத்தி உதவி ஆணையாளர் எவ். சி. சத்தியசோதி, யாழ் இந்திய துணைத்தூதர் சாய்முரளி, நீதிபதிகள், பொலிஸ் உயரதிகாரிகள், கடற்படை உயரதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் என பலர் இன்றைய திருப்பலியில் கலந்து சிறப்பித்து புனிதரின் ஆசிபெற்றனர்.