இலங்கையின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
இன்று செவ்வாய்கிழமை 17 வது மரணம் பதிவையுள்ளது.
கொழும்பின் புறநகர் பகுதியான ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஒருவார காலத்திற்குள் இது நான்காவது கொரோனா நோயாளியின் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.