By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > உலகச் செய்தி > இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!
உலகச் செய்தி

இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

Last updated: 2024/12/16 at 10:32 PM
Published December 16, 2024 180 Views
Share
2 Min Read
SHARE

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (டிசம்பர் 16) பிற்பகல் பிரதமரின்உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது மற்றும் அரசுஅதிகாரிகளின் திறன் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய – இலங்கை தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கைக்கு விசேடமானஇடமுள்ளது என்பதை தாம் நன்கு அறிவதாக கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில்ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நினைவு கூர்ந்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டுவிஜயத்திற்காக இந்தியாவை தெரிவு செய்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சிஅடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்தார்.

எதிர்கால நோக்குடன் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை புதியகோணத்தில் கொண்டு செல்லும் வகையில் பௌதீக, டிஜிட்டல் மற்றும் எரிசக்திஆகிய பிரதான தூண்களை பலப்படுத்துவதற்காக இலங்கைக்கு தொழில்நுட்பஆதரவை வழங்குவதும், இரு நாடுகளுக்குமிடையே மின்சார வலையமைப்புஇணைப்பு மற்றும் பல் உற்பத்தி, பெற்றோலியக் குழாய் இணைப்பைஏற்படுத்துவது என்பன குறித்தும் இக் கலந்துரையாடலில் கவனம்செலுத்தப்பட்டது.

இந்திய அபிவிருத்தி ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், அநுராதபுரம் புகையிரத பாதை சமிக்ஞைக் கட்டமைப்பு மற்றும்காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு என்பவற்றுக்கு உதவி வழங்குவதுதொடர்பிலும் இதன் போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தியக் கல்வி ஒத்துழைப்பின் கீழ் அடுத்த வருடம் முதல் யாழ்ப்பாணம் மற்றும்கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்குமாதாந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. அடுத்த 5 வருடங்களில் 1,500 இலங்கை அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க இந்தியப் பிரதமர்உடன்பாடு தெரிவித்தார்.

அத்தோடு வீடமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு,இலங்கையில் விவசாயத்துறை, பால் உற்பத்தித்துறை மற்றும்கடற்றொழில்துறை முன்னேற்றம் என்பவற்றுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்.

இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பைஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும்இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்குதெரிவிதார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பின் (Colombo Security Conclave) கீழ் கடல்சார்பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, இணையப் பாதுகாப்பு, கடத்தல் மற்றும்திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு எதிராக போராடுதல், மனிதாபிமான உதவிமற்றும் அனர்த்த நிவாரணம் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பதுகுறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பகல்போசனவிருந்து வழங்கினார்.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்

You Might Also Like

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை- மீண்டும் வெளியாகிய கரும்புகை !

SUB EDITOR December 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழ். வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை – எம். பி. அர்ச்சுனா உட்பட இருவருக்கு பிணை !
Next Article ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

உலகச் செய்தி

இந்தியாவால் உருக்குலையப் போகும் பாகிஸ்தானின் வாழ்வாதாரம்!

June 9, 2025
உலகச் செய்தி

கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!

May 20, 2025
உலகச் செய்தி

கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சர்- ஹரி ஆனந்தசங்கரி

May 16, 2025
உலகச் செய்தி

குடியேற்றச் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் பிரிட்டன்!

May 12, 2025
உலகச் செய்தி

ஐபிஎல் தொடர் குறித்து புதிய தீர்மானம்!!

May 11, 2025
உலகச் செய்தி

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் !

May 11, 2025
உலகச் செய்தி

‘ஒப்பரேஷன் சிந்தூர்’ – தாக்குதலை நடத்தும் இந்திய ராணுவம் !

May 10, 2025
உலகச் செய்தி

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை- மீண்டும் வெளியாகிய கரும்புகை !

May 8, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?