கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுள் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை அங்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் முடிவில் மொத்தம் 252 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2350 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 1979 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு 360 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.