கந்தகாடு போதை பொருள் புனர்வாழ்வு நிலையம் ஊடாக ஏற்பட்டுள்ள புதிய கொரோனா நோயாளிகளின் கொத்து காரணமாக சமூகத்திற்குள் வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்
அதற்கமைய நேற்றைய தினம் புதிய 56 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிரிக்க கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றிய ஆலோசகருக்கும் கொரோனா தொற்றியுள்ளது. அவர் தனது வீட்டிற்கு சென்று திரும்பியர் என தெரியவந்துள்ளது.